சினிமாவை விட்டு விலகுகிறாரா நடிகர் நாசர்?

நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலக போவதாக செய்தி பரவிய நிலையில், தன் மூச்சு இருக்கும் வரை நடித்து கொண்டே இருப்பேன் என நாசர் விளக்கம் அளித்துள்ளார்...
x

சினிமாவை விட்டு விலகுகிறாரா நடிகர் நாசர்?

நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலக போவதாக செய்தி பரவிய நிலையில், தன் மூச்சு இருக்கும் வரை நடித்து கொண்டே இருப்பேன் என நாசர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் நாசர் வயதான காரணத்தால் சினிமாவை விட்டு விலக போவதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இதற்கு விளக்கமளித்துள்ள நாசர், சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி தன்னால் சொல்லப்பட்டது அல்ல என்றும், புனைவு என்றும் தெரிவித்துள்ளார். தவறான விஷயங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ள நாசர், தன் மூச்சு இருக்கும் வரை நான் நடித்து கொண்டு தான் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்