'கடைசி விவசாயிக்கு' சர்வதேச அங்கீகாரம்...உலகளவில் 2வது சிறந்த படம்

x

'கடைசி விவசாயிக்கு' சர்வதேச அங்கீகாரம்...உலகளவில் 2வது சிறந்த படம்

சர்வதேச படங்கள் குறித்து விமர்சனங்கள், சிறந்த படங்கள் குறித்து தரவரிசை வெளியிடும் "LETTERBOXD" நிறுவனம், 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் சர்வதேச அளவில் வெளியான சிறந்த 25 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி படத்திற்கு இரண்டாம் இடத்தை கொடுத்து அந்த நிறுவனம் கவுரவித்துள்ளது. இந்த பட்டியலில் ராஜமவுலியின் RRR படம் 6வது இடத்தையும், லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் 11வது இடத்தையும், மலையாள படமான PADA 21வது இடத்தையும் பிடித்துள்ளன. கடைசி விவசாயி படம் இரண்டாம் இடம் பிடித்ததை சுட்டிக்காட்டி ரசிகர்கள் இயக்குநர் மணிகண்டன், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்