"ஹா...ஹா...ஹாசினி..." ஜெனிலியாவுக்கு இன்று பிறந்தநாள்
நடிகை ஜெனிலியா இன்று தனது 35வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள ஜெனிலியா, தமிழில் முதன்முறையாக "பாய்ஸ்" திரைப்படம் மூலம் அறிமுகமானார். சச்சினில் விஜய்க்கு ஜோடியாகவும், சந்தோஷ் சுப்பிரமணியத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் நடித்த ஜெனிலியா தன் துறுதுறுப்பான குழந்தைத் தனமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்... தொடர்ந்து தமிழில் உத்தமபுத்திரன், வேலாயுதம், மற்றும் இந்தி, தெலுங்கு, மராத்தி என கலக்கி வரும் ஜெனிலியாவுக்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்...
Next Story
