"போய் கதையை சொல்லு"...நடிகர் விஜய் நெல்சனிடம் சொன்ன அந்த ஒரு வார்த்தை...இயக்குநர் நெல்சன் நெகிழ்ச்சி

x

ஜெயிலர் படம் தொடங்கும் போது எழுந்த சர்ச்சைகளால் படத்தில் இருந்து விலகும் முடிவுக்கு சென்றதாக இயக்குநர் நெல்சன் கூறியுள்ளார்.

ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் பேசிய அவர், படத்தின் கதையை ரஜினியிடம் கூறுவதற்கு விஜய்தான் நம்பிக்கை கொடுத்ததாகவும், ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்குமாறு பீஸ்ட் பட செட்டில் ஊக்கப்படுத்தியதாகவும் தெரிவித்தார். படம் தொடங்கிய போது எழுந்த விமர்சனங்களால், படத்தில் இருந்து தன்னை நீக்கிவிடுவார்கள் என எதிர்மறை எண்ணங்களில் இருந்ததாக நெல்சன் தெரிவித்தார். தன்னை நம்பினால் மட்டுமே இந்த படத்தை உருவாக்கலாம் என ரஜினியிடம் கூறியதாக குறிப்பிட்ட நெல்சன், முதல் நாளில் இருந்து ரஜினி முழு ஆதரவும், மரியாதையும் கொடுத்ததாக நெகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்