தீபாவளி முன்னிட்டு ஆதரவற்றோருக்கு சர்ப்ரிஸ் கொடுத்த - விஜய் மக்கள் இயக்கம்

x

காரைக்காலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிகளை வழங்கினர். காரைக்கால் பகுதியில் 5 ஆதரவற்றோர் இல்லங்கள் இருக்கும் சூழலில், அவர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில், புத்தாடை, பட்டாசு, இனிப்பு என 7 வகையான பொருட்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர். இதனை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள், தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்