"யோவ் மனுஷனாயா அவரு..ஐயோ ஐயோ.." - ஆக்ரோஷமாக வெடித்த தனுஷ் ரசிகர்

x

நடிகர் தனுஷ் நடித்துள்ள "கேப்டன் மில்லர் படத்தின்" டீசர், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் படத்தின் டீசர் வெளியான பிறகு, திரைப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேக் வெட்டி கொண்டாடினார். டீசர் வெளியிட்டுக்காக, தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் திரையரங்கில் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 12 மணிக்கு டீசர் திரையிடும்போது வான வேடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் கொண்டாடினர். இதற்கிடையே, இன்று நடிகர் தனுஷின் பிறந்த நாளை ஒட்டி, திரையரங்கில் கூடியிருந்த ரசிகர்கள், நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்