காமெடி வசனங்களுக்கு பெயர் போன கிரேசி மோகன் பிறந்த தினம்

x
  • தற்போதைய தமிழ் சினிமாவில் காமெடியன்களுக்கு தட்டுப்பாடுஏற்படுவதால்.. ஹீரோக்களும்.. குணச்சித்திர நடிகர்களுமே காமெடியில் களமிறங்கும் நிர்பந்தம் இருக்கிறது..
  • ஆனால் நகைச்சுவை நடிகர்கள் கொட்டிக்கிடந்த காலத்திலேயே..வில்லன் முதல் சைட் கேரக்டர் வரை ஒரு நகைச்சுவை நடிகரின் நகலாகவே வடிவமைப்பதில் வல்லமை பெற்றவர் தான் கிரேசி மோகன்.
  • 1952ம் ஆண்டு இதே நாளில் பிறந்த மோகன் ரங்கச்சாரி தான் தனது அசாத்திய நகைச்சுவை நயத்தால்.. கலை மீதான ஆர்வத்தால் கிரேசி மோகனாக அழைக்கப்பட்டார்.
  • பல மேடை நாடகங்களை அவரே இயக்கி அவரே நடித்து கலக்கியது தான் அவரின் திரைத்துறை பிரவேசத்திற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது. இவரின் வசனங்களால் வியந்த கமல் அவரை வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தினார்.
  • ஸ்டைல், இயக்கம், நடிப்பு என சகலகலா வல்லவனான கமல்ஹாசனுக்கு புதுவித நகைச்சுவை ரசத்தை பெருக்கியவர் கிரேசி மோகன் தான்.
  • அபூர்வ சகோதரர்கள் படத்தில் கண் இமைக்க முடியாத கதைக்களம் அசத்த.. தனது அசாத்திய வசனங்களால் படத்தை கொண்டாட வைத்தார் கிரேசி மோகன்..
  • இதற்கு பின் கமலுடன் கிரேசி மோகன் கைக்கோர்த்தால் அந்த படத்தில் 100 சதவீதம் சிரிப்புக்கு கேரண்டி இருக்கும்.
  • மைக்கேல் மதனக்காமராஜன், சதிலீலாவதி என அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்தனர்.
  • அடுக்கு மொழி வசனம்... டைமிங் கவுண்டர்.. வார்த்தை ஜாலம்.. என காதலா காதலா படத்தில் காமெடியில் புதுமை காட்டியவர் கிரேசி மோகன்.
  • இது மட்டுமா 80ஸ் கிட்ஸ் தொடங்கி 2கே கிட்ஸ் வரை ரசிக்கும் அவ்வை சண்முகி.., தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே. சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட படங்களின் வசனங்கள் காதில் ஒலித்து கொண்டு தான் இருக்கின்றன.
  • கிரேசி மோகனின் பெரும்பாலான படங்களில் கதாநாயகிகளின் பெயர் ஜானகி என்றே இருக்கும்..
  • அபூர்வ சகோதரர்கள் கவுதமி, தெனாலி ஜோதிகா, பம்மல் கே சம்பந்தம் சிம்ரன், மகளிர் மட்டும் ஊர்வசி, காதலா காதலா ரம்பா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் சினேகா, அவ்வை சண்முகி மீனா என இன்றுவரை மனதில் நிற்கும் கிரேசொ மோகன் கதாநாயகிகளின் பெயர் ஜானகி தான்.
  • தான் வசனகர்த்தாவாக உருவெடுக்க காரணமாக இருந்த தனது ஆசிரியை ஜானகி என்பவருக்கு தனது படைப்புகளை சமர்ப்பிக்கும் வகையில் கதை எழுதும் முன்னரே கதாநாயகி பெயரை ஜானகி என பேசி வைத்து விடுவாராம்.
  • சிறுகதை, மேடை நாடகங்கள், வசனங்கள் எழுதி கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த கிரேசி மோகனுக்கு கலைமாமணி விருதை வழங்கி அழகு பார்த்தது தமிழக அரசு.
  • இப்படி தன் இன்றியமையாத திறமையால் திரைத்துறையில் நீங்கா இடம் பிடித்துள்ளார் கிரேசி மோகன்...

Next Story

மேலும் செய்திகள்