ரஜினிகாந்த் குறித்து ரம்பா தெரிவித்த கருத்தால் சர்ச்சை

x

நடிகர் ரஜினிகாந்த் குறித்து நடிகை ரம்பா தெரிவித்துள்ள கருத்துக்கள், இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அருணாச்சலம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரம்பா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது ரஜினி குறித்து ரம்பா தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. சமூக வலைதளங்களில் ரம்பாவுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ரம்பாவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்