பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் மீது அமெரிக்காவிலிருந்து வந்த புகார்..
தமிழில் முருங்கைக் காய் சிபிஸ், நட்புனா என்னனு தெரியுமா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தரன் சந்திரசேகர். சமூக வலைதளம் வாயிலாக பிரபலமான இவர், சமீபத்தில் சின்னத்திரை நடிகை ஒருவரை திருமணம் செய்தார். இந்நிலையில், ரவீந்தரன் சந்திரசேகர் தன்னிடமிருந்து பணம் பெற்று மோசடி செய்ததாக கூறி அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவர், ஆன்லைன் வாயிலாக சென்னை போலீசில் புகாரளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசாரிடம், ரவிந்தர் சமாதானமாக செல்வதாகவும், பணத்தை செட்டில் செய்து விடுவதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், அமெரிக்க வாழ் இந்தியரான விஜய்க்கு, ரவிந்தர் அனுப்பிய இரு வங்கி காசோலையும் பவுன்ஸ் ஆனதாக கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறியுள்ள விஜய், ரவிந்தரை நல்லவர் என நம்பி ஏமாந்ததாக தெரிவித்திருக்கிறார்.