அபூர்வ ராகம்"...ஒலிக்கத் துவங்கி 48ஆண்டுகள் நிறைவு

x

நடிகர்கள் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் நடிப்பில், கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியாகி 48 ஆண்டுகள் உருண்டோடி விட்டன... அபூர்வ ராகங்கள் வாயிலாகத் தான் ரஜினி தன் திரைப்பயணத்திற்குள் நுழைந்தார்... ஸ்ரீவித்யாவின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது... மரபு மீறிய காதல் என்ற வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இப்படம் சற்று பிசகினாலும் சர்ச்சை ஆகியிருக்கும்... ஆனாலும், கே.பாலசந்தர் தன் சாதுரியத்தால் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இதை வார்த்தெடுத்தார்... காலத்திற்கும் பேசப்படும் அபூர்வ ராகத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த நிலையில், அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்