நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு

x

நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர் பிரகாஷ் பாபு, எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, சத்யராஜ், சிபிராஜ், இயக்குநர்கள் பா. ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா, மித்ரன், ராஜூ முருகன், சுசீந்திரன், நடிகைகள் தமன்னா, அனு இம்மானுவேல், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர் பிரபு, தனஞ்செயன், சிவா, இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜி.வி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, தான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆனதாக தெரிவித்தார். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக 2003-ல் வந்ததாகவும், 25-வது படமாக ஜப்பான் வருவதில் சந்தோஷமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்