தெலுங்கு படத்தில் இணையும் நடிகர் தனுஷ்...

x

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 51வது படத்தின் அறிவிப்பு வெளியானது. கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து, 50வது படத்தை தானே இயக்கி நடிக்கும் தனுஷ், அடுத்ததாக தெலுங்கில் தேசிய விருது வென்ற பிரபல இயக்குநர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளார். இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான வாத்தி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்