"அவளுடன் நானும் இறந்து விட்டேன்"... படித்ததுமே கண்ணீர் வர வைக்கும் நடிகர் விஜய் ஆண்டனியின் கடிதம்

x

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆன்டனி, தனது மகள் தன்னுடனே இருப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தனது மகள் மீரா அன்பானவள், தைரியமானவள் என குறிப்பிட்டுள்ள‌ அவர், இந்த உலகைவிட சிறந்த ஜாதி, மதம், பொறாமை, வன்ம‌ம் இல்லாத அமைதியான இடத்திற்கு சென்றிருக்கிறாள் என கூறியுள்ளார். தன்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள் என்றும், அவளுடன் தானும் இறந்துவிட்டதாகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இப்போது மீராவுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டதாகவும், அவள் பெயரில் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள் என்றும் விஜய் ஆன்டனி பதிவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்