'ஃபைட் கிளப்' படத்தின் 2வது பாடல் வெளியீடு. கோவிந்த் வசந்தா இசையில் 'ராவணமவன்'

x

ஃபைட் கிளப் படத்தின் 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அப்பாஸ் ஏ ரஹமத் இயக்கத்தில், 'உறியடி' விஜயகுமார் நாயகனாக நடித்துள்ள படம் ஃபைட் கிளப். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் வெளியீடாக, வரும் 15ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. இதையொட்டி சில தினங்களுக்கு முன் 'யாவரும் காணாத' என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், ராவணமவன் என்ற இரண்டாவது லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்