"முத்து" வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவு

x

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்தின், மீனா நடிப்பில் உருவான முத்து திரைப்படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்களுள் ஒன்று தான் முத்து... ரஹ்மானின் இசையில் அனைத்துப் பாடல்களும் அதிரி புதிரி ஹிட்... கேரளாவில் மலையாளம் தெரியாமல் ரஜினி படும் பாடு, குதிரை வண்டி ஓட்டும் அவரின் ஸ்டைல், கொள்ளை கொள்ளும் அழகு தேவதையாய் படம் முழுக்க தன் துருதுரு நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போட்ட மீனா, என இப்படைத்தை அனைவரும் விரும்புவதற்கான காரணங்கள் ஏராளம்... தமிழ் மட்டும் அல்லாது, மாநிலம் கடந்து... ஏன் நாடு கடந்து ஜப்பானில் ரஜினிகாந்த், மீனாவிற்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்த படம் முத்து...


Next Story

மேலும் செய்திகள்