சர்ச்சையை கிளப்பிய "விக்ரம்" போஸ்டர் - ம.நீ.ம. நிர்வாகிகள் மீது பாய்ந்தது வழக்கு..!

'அந்த ஒரு வார்த்தை' - சர்ச்சையை கிளப்பிய "விக்ரம்" பட போஸ்டர் - ம.நீ.ம. நிர்வாகிகள் மீது பாய்ந்தது வழக்கு
x
சர்ச்சையை கிளப்பிய "விக்ரம்" போஸ்டர் - ம.நீ.ம. நிர்வாகிகள் மீது பாய்ந்தது வழக்கு..!

'அந்த ஒரு வார்த்தை' - சர்ச்சையை கிளப்பிய "விக்ரம்" பட போஸ்டர் - ம.நீ.ம. நிர்வாகிகள் மீது பாய்ந்தது வழக்கு மதுரையில் கமல்ஹாசனின் விக்ரம் பட போஸ்டர் விவகாரத்தில், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில், மதுரையின் பல்வேறு பகுதியில் விக்ரம் படத்தை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. ஆனால், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளான கதிரேசன் மற்றும் வினோத் சேது ஆகியோரின் புகைப்படத்துடன், ஓட்டப்பட்ட போஸ்டரில் சர்ச்சைக்குரிய வகையிலும், ஆபாச வார்த்தைகள் இடம்பெற்று முகம் சுழிக்க வைத்தது. இதையடுத்து, போஸ்டர்களை அகற்றிய போலீசார், இருவர் மீதும் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்