ஹாலிவுட் வரை தடம் பதித்த தனுஷ்..!

கஸ்தூரி ராஜாவின் வாரிசுகளாக துள்ளுவதோ இளமையில் அறிமுகமாகினர் செல்வராகவன் - தனுஷ் சகோதரர்கள்...
ஹாலிவுட் வரை தடம் பதித்த தனுஷ்..!
x
ஹாலிவுட் வரை தடம் பதித்த தனுஷ்..!

கஸ்தூரி ராஜாவின் வாரிசுகளாக துள்ளுவதோ இளமையில் அறிமுகமாகினர் செல்வராகவன் - தனுஷ் சகோதரர்கள்...
தனுஷின் இப்போதைய வளர்ச்சிக்கு அடித்தளம் செல்வராகவன் தான்... "காதல் கொண்டேன்" வளர வைத்தது... புதுப்பேட்டை பேச வைத்தது. "மயக்கம் என்ன" தனுஷ் நடிப்பை கொண்டாட வைத்தது.

இருந்தாலும், பாலுமகேந்திராவுடனான அது ஒரு கனாக்காலம், என் வாழ்க்கையை மாற்றிய படம் என தனுஷே கூறியுள்ளார். 

சினிமாவில் மெல்ல மெல்ல வளர்ந்துக்கொண்டிருக்க, வெற்றிமாறனுடனான அறிமுகம், தனுஷை அடுத்த லெவலுக்கு அழைத்து சென்றது.. அசுர நடிகனாக....

ஆடுகளம் இந்த கூட்டணியின் கிளாஸ்... அசுரன் இந்த கூட்டணியின் மாஸ்....

யாரடி நீ மோகினி, வேலையில்லா பட்டதாரி, மாரி போன்ற படங்கள் தனுஷின் மற்றொரு பக்கம்... அவ்வப்போது இப்படிப்பட்ட படங்களை கொடுத்தும் ரசிக்க வைப்பார்.

வளர்ந்து வரும் காலக்கட்டத்திலேயே பாலிவுட்டில் அறிமுகமாக, 2வது படத்தில் இந்தி உலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்தார். இப்போது ஹாலிவுட் படைப்பான GREY MAN-ல் நடித்து முடித்துவிட்டார்.

இதைதவிர இயக்குநர் தனுஷ், எழுத்தாளர் தனுஷ், பாடகர் தனுஷும் ரசிகர்களுக்கு பரீட்சயம்..

தனது கெரியரில் தோல்வி படங்களும் அங்கம்... ஆனால், சீரான இடைவெளியில் நடிப்புக்கு தீனி போடும் பாத்திரங்களை கொடுத்து வருவது தான் தனிஷின் சிறப்பு... 

இது தொடர வேண்டும் என்பதே ரசிகர்களது எதிர்பார்ப்பு....

Next Story

மேலும் செய்திகள்