"தோனி கூறியபடி அஜித் படத்தில் கவனம்" | Ajith Kumar | MS Dhoni | Vignesh Shivan

தோனி கூறியதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அஜித்தின் புதிய படத்திற்காக பணியாற்றி வருவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
x
தோனி கூறியதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அஜித்தின் புதிய படத்திற்காக பணியாற்றி வருவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அஜித்குமாரின் 62வது படத்தை இயக்குவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள விக்னேஷ் சிவன், ரிசல்ட்டை விட, அதற்கு காரணமான செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தோனி கூறியதை சுட்டிக்காட்டி, அஜித் படத்தில் முழு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். இந்த படம் அஜித் மற்றும் அவரது ரசிகர்களை கவர வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்