ஒருதலை ராகம் வெளியான தினம் இன்று....

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படைப்புகளில் ஒன்றான "ஒருதலை ராகம்" படம் வெளியான தினம் இன்று.... இதுபற்றி ஒரு செய்தி தொகுப்பு..
ஒருதலை ராகம் வெளியான தினம் இன்று....
x
ஒருதலை ராகம் வெளியான தினம் இன்று....
டி.ஆர். என்ற கலைஞன் அறிமுகமான படம்..
80களில் இளசுகள் கொண்டாடிய படம்...
பாடல் ஒவ்வொன்றும் மிகப்பெரிய ஹிட்...

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படைப்புகளில் ஒன்றான "ஒருதலை ராகம்" படம் வெளியான தினம் இன்று.... இதுபற்றி ஒரு செய்தி தொகுப்பு..

ஒரு தலை ராகம்...

டி.ராஜேந்தர் என்ற படைப்பாளி தமிழ் சினிமாவிற்கு கொடுத்த அழகிய படைப்பு...

1980ஆம் ஆண்டு இதே நாளில் வெளியாகி, தமிழ்நாட்டின் மூளை முடுக்கெங்கும் கொண்டாடப்பட்ட படம்... குறிப்பாக இளசுகளால்....

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாடல்கள் தான்.... ரிலீசான போது எதிர்பார்த்த அளவு படம் ஓடாமல் இருக்க, பாடல்கள்தான் மக்களை ஒரு தலை ராகத்தை பார்க்க வைத்தது....


அதிலும் வாசமில்லா மலர் இது பாடல், டி.ஆர் கொடுத்த கிளாசிக்..


படத்தில் 7 பாடல்கள் இருக்க, அனைத்திலும் பெண் குரல் இல்லை என்பது கவனிக்க வைத்தது.


பாடல்கள் மட்டுமல்ல, படத்தின் கதையும் தனி ரகம்.. பணக்கார வீட்டு பையன் ஏழை பெண்ணை உயிருக்கு உயிராக நேசிப்பதையும், இறுதி வரை போராடியும் காதல் கைகூடாமல் போவதை சோகத்துடன் நெஞ்சை உலுக்கும் விதத்தில் படமாக்கியிருப்பார் டி.ஆர்.


இப்போது இது டி.ஆர். படம் என சிலாகிக்கப்பட்டாலும், படம் ரிலீசான போது இயக்கத்திலும், இசையிலும், இரண்டாவது பெயராகவே டி.ஆர். பெயர் இருந்தது.... தயாரிப்பாளர் இப்ராகிமே இயக்குநராக அறியப்பட, இசையிலும், ஏ.ஏ.ராஜின் பெயர் இருந்தது டி.ஆருக்கே சோகம்...


80களில் பல இளசுகளின் வாழ்வியலை, சினிமாவில் கொண்டு வந்தது தான் ஒரு தலை ராகத்தின் ஷ்பெஷல்..


Next Story

மேலும் செய்திகள்