75வது பிரிட்டிஷ் திரைப்பட விருதுகள் விழா - சிறந்த நடிகராக வில் ஸ்மித்துக்கு விருது

லண்டனில் பிரிட்டிஷ் திரைப்பட விருதுகள் விழா கோலாகலமாக நடைபெற்றது.
x
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடகர், நடிகைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 75வது பிரிட்டிஷ் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, லண்டனில் நேற்று நடைபெற்றது. ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில், சிறந்த திரைப்படத்துக்கான விருதை "The Power of the Dog" படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநருக்கான விருதை அந்த படத்தின் இயக்குநர் ஜேன் கேம்பியன் வென்றார். சிறந்த நடிகராக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தும், சிறந்த நடிகையாக ஜோன்னாவும் அறிவிக்கப்பட்டனர். இந்த விழாவில் டூன் (dune)திரைப்படத்திற்கு பல்வேறு பிரிவுகளில் 5 விருதுகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்