"எதற்கும் துணிந்தவன்" வெளியீடு - சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்தியபடி போலீஸ் பாதுகாப்பு

"எதற்கும் துணிந்தவன்" வெளியீடு - சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்தியபடி போலீஸ் பாதுகாப்பு
x
எதற்கும் துணிந்தவன் படம் வெளியான நிலையில், சென்னையில் உள்ள சூர்யா வீட்டிற்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.  ஜெய்பீம் சர்ச்சைக்கு சூர்யா மன்னிப்பு கேட்காததை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தை கடலூர் மாவட்டத்தில் வெளியிட அனுமதிக்க கூடாது என்று மாவட்ட பாமக மாணவர் சங்க செயலாளர் விஜயவர்மன், திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில், தி.நகர், ஆற்காடு தெருவில் உள்ள சூர்யா வீட்டிற்கு ஏற்னவே 5 போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளித்து  வரும் நிலையில், தற்போது கூடுதலாக பாதுகாப்பு வழங்க சென்னை காவல் துறை திட்டமிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்