நடிகர் விஷால் நிறுவனத்தில் மோசடி - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் 45 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் கணக்காளர் ரம்யாவிற்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் 45 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் கணக்காளர் ரம்யாவிற்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் கணக்காளர் ரம்யா என்பவர் பணிபுரிந்தார். அவர், நிறுவன ஊழியர்களின் ஊதியத்துக்கான வருமான வரித்தொகை 45 லட்சம் ரூபாயை வரித்துறைக்கு செலுத்தி விட்டதாக போலி ஆவணங்களை காட்டி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி ரம்யா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 45 லட்சம் ரூபாயில் 21 லட்சம் செலுத்திவிட்டதாக ரம்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்ஜாமீன் வழங்க விஷால் தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால், கணக்காளர் ரம்யாவுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 15 லட்சம் ரூபாயை பிணை தொகையாக செலுத்தவும், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் 2 வாரங்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்