திடீரென்று தாவி குதித்த ரசிகர் - நிலை தடுமாறிக் கீழே விழுந்த பவன் கல்யாண்

பவன் கல்யாணைக் கட்டி அணைக்க முயன்ற ரசிகர் - திடீரென்று தாவி குதித்த ரசிகர்
x
பிரபல நடிகரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் மீது ரசிகர் ஒருவர் தாவி குதித்ததால், பவன் கல்யாண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஆந்திர மாநிலம் நரசாபுரம் பகுதியில் நேற்று ஜன சேனா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொள்ள பவன் கல்யாண் காரில் வருகை தந்தார். செல்லும் வழியில் ரசிகர்களுக்கு பவன் கல்யாண் காரின் மேலே நின்றவாறு கையசைத்தார். அப்போது காரின் மீது ஏறிய ரசிகர் ஒருவர் பவண் கல்யாணைக் கட்டி அணைக்க முயன்ற போது, பவன் கல்யாண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்டு மீண்டும் எழுந்து ரசிகர்களை சந்தித்தார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்