விஜய் பட ப்ரொமோ வீடியோவில் அஜித் புகைப்படம்..? - அடுத்தடுத்து வெளியாகும் பீஸ்ட், வலிமை அப்டேட்ஸ்

பீஸ்ட், வலிமை திரைப்படங்கள் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள், அவர்களது ரசிகர்களை சமூக வலைதளங்களில் குதூகலிக்கச் செய்திருக்கிறது. இதுகுறித்து விவரிக்கும் ஒரு தொகுப்பைக் காணலாம்...
விஜய் பட ப்ரொமோ வீடியோவில் அஜித் புகைப்படம்..? - அடுத்தடுத்து வெளியாகும் பீஸ்ட், வலிமை அப்டேட்ஸ்
x
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் வரும் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு அவ்வப்போது  லேட்டஸ்ட் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. 
இதற்கிடையே, நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் சமீபத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட விஜயின் பீஸ்ட் படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து, வலிமை படத்தின் நாங்க வேற மாரி பாடலின் சாதனையை முறியடித்துள்ளது. அந்தப் பாடல் வெளியான 30 நிமிடத்திற்குள் 5 லட்சம் லைக்குகளை பெற்றது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், அதே அரபிக் குத்து பாடலின் புரோமோ வீடியோவில் விவேகம் படத்திற்காக அனிரூத் வாங்கிய விருதில் அஜித் புகைப்படம் இருந்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


உலக அளவில் 5 மொழிகளில் வெளியாக இருக்கும் வலிமை, சுமார் 300 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகி, இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பெருமையுடன் கூறியிருக்கிறார்.ஆனால் பீஸ்ட் திரைப்படம் 500 கோடி ரூபாய் வரை வியாபாரம் ஆகும் என்ற கருத்து நிலவி வருகிறது. அது மட்டுமல்லாது பீஸ்ட் திரைப்படத்தை இந்தியில் ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட திரைப்பட குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே அஜித்தின் 61-வது படத்திற்கான அவரது கெட்டப் புகைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.இப்படி ஏட்டிக்கு போட்டியாக அஜித், விஜய் படங்களின் அப்டேட்கள் வெளியாகி வந்தாலும் இரு தரப்பு ரசிகர்களுக்கும் அது மகிழ்ச்சியைத்தான் தந்திருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்