"பீஸ்ட்"ஏப்.14 ல் ரிலீஸ் ?

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம், ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம், ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் பீஸ்ட் படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படம், பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடையாத சூழல் இருந்தது. இந்நிலையில், வருகிற ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்