"ஒய் ஐ கில்டு காந்தி" திரைப்படத்திற்கு எதிராக மனு - உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

ஒடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள 'ஒய் ஐ கில்டு காந்தி' திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
x
ஒடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள 'ஒய் ஐ கில்டு காந்தி' திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.டெல்லியை சேர்ந்த சிக்கந்தர் பெல் தாக்கல் செய்த ரிட் மனுவில், ஒடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள 'ஒய் ஐ கில்டு காந்தி' திரைப்படம்  மகாத்மா காந்தியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும், பொது அமைதி, ஒற்றுமை கெடும் விதமாக உள்ளதால் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் அனுஜ் பண்டாரி, காந்தியை இழிவுபடுத்தும்  காட்சிகள் படத்தில் இடம் பெற்றதாக  வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், படத்தின் காட்சிகள் துரதிர்ஷ்டவசமானது என கூறியதுடன் தடை கோரி நேரிடையாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும், அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது மட்டுமே ரிட் மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்ததுடன், இந்த விவகாரம் தொடர்பான மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதி வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்