ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கை - தள்ளிப்போகிறது ஆர்.ஆர்.ஆர் பட வெளியீடு

ஆர்.ஆர்.ஆர். திரைப்பட வெளியீடு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கை - தள்ளிப்போகிறது ஆர்.ஆர்.ஆர் பட வெளியீடு
x
ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கை - தள்ளிப்போகிறது ஆர்.ஆர்.ஆர் பட வெளியீடு 

ஆர்.ஆர்.ஆர். திரைப்பட வெளியீடு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வரும் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே,  ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக ஆர்.ஆர்.ஆர். பட வெளியீடு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்திலும் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்