கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய " ரைட்டர் " படக்குழு..

சமுத்திரகனி நடிப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் வெற்றியை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது.
x
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு வெற்றிப் படங்களை தொடர்ந்து ரைட்டர் எனும் படத்தை இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் வெளியான ரைட்டர் திரைப்படம், காவல்துறையில் நடக்கும் அதிகார மீறலை பதிவு செய்துள்ளது. திரையரங்கில் வெளியாகி படம் வெற்றி அடைந்ததை அடுத்து, படக்குழுவினருடன் கேக் வெட்டி இயக்குநர் பா.இரஞ்சித் கொண்டாடினார்.


Next Story

மேலும் செய்திகள்