கோலாகலமாக தொடங்கிய 'மார்கழியில் மக்களிசை' - பறையிசைத்து தொடங்கி வைத்தார் கனிமொழி எம்.பி.

சென்னையில் நீலம் பண்பாட்டு மையத்தின் 'மார்கழியில் மக்களிசை' கலைநிகழ்ச்சிகள் பறையிசையுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டன.
x
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கலை மக்களுக்கானது, அதனை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 'மார்கழியில் மக்களிசை' கலைநிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு நடத்தப்பட்டன. அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த வருடம் மதுரை மற்றும் கோவை ஆகிய மாநகரங்களில் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் 'மார்கழியில் மக்களிசை' கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டது. டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறும் இதனை, திமுக எம்.பி., கனிமொழி, இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பறையிசைத்து கோலாகலத்துடன் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற மக்களிசை கலைநிகழ்ச்சிகளையும் அவர்கள் கண்டுகளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்