நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...
x
இதனையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
அவருக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. நடிகர் வடிவேலு, நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் தொழில்நுட்பம் மற்றும் மேக்கப் டெஸ்டிற்காக லண்டன் சென்று திரும்பினார். இதனால் கொரோனா தொற்று பரவி இருக்கக் கூடுமோ என்ற அச்சத்தில் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக நடிகர் வடிவேலு, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வடிவேலுவின் மக்கள் தொடர்பாளர் சதீஷ் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்