மாநாடு திரைப்படம் - டி.ராஜேந்தர் வழக்கு

மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கியதை எதிர்த்து நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
x
மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கியதை எதிர்த்து நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மாநாடு படம் திட்டமிட்டபடி வெளியாகாது என அறிவித்திருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் சார்பாக 5 கோடி ரூபாயை உத்தரவாதமாக செலுத்தியதாக டி.ராஜேந்தர் கூறியுள்ளார். எனவே, தனக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்கும்வரை, மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமைக்கு தடைவிதிக்க வேண்டும் என டி.ராஜேந்தர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி, பைனான்சியர் உத்தம்சந்த் பதிலளிக்க உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்