ஜெய்பீம் திரைப்படம் 'குரலற்றவர்களின் குரல்' - இயக்குநர் சங்கர் புகழாரம்

ஜெய்பீம் திரைப்படம் குரலற்றவர்களின் குரலாக உள்ளதாக இயக்குநர் சங்கர் புகழாரம் தெரிவித்து உள்ளார்.
x
ஜெய்பீம் திரைப்படம் குரலற்றவர்களின் குரலாக உள்ளதாக இயக்குநர் சங்கர் புகழாரம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இயக்குநரின் விரிவான மற்றும் யதார்த்த திரைக்கதை அமைப்பு மெய் சிலிர்க்க வைப்பதாகவும், திரைப்படம் மற்றும் சூர்யாவின் அழுத்தமான நடிப்பை தாண்டி சமூகத்தின் மீது சூர்யா கொண்டுள்ள அக்கறை பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இத்திரைப்படத்தின் மூலம் நல்ல திரைப்படங்கள் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என மீண்டும் நிரூபணமாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்