விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' டீசர் வெளியீடு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதியின் மாமனிதன் டீசர் வெளியீடு
x
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தர்மதுரை திரைப்படத்திற்கு பிறகு, இயக்குனர் சீனு ராமசாமியும், விஜய் சேதுபதியும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். படத்தின் பணிகள் நிறைவடைந்து நீண்ட நாட்களான நிலையில், தற்போது டீசர் வெளியாகி உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்