நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக மனு

நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக மனு
x
நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி  தாக்கப்பட்டதாக காட்சிகள் வெளியானது. இந்த நிலையில், சைதாப்பேட்டையை சேர்ந்த நடிகர் மகா காந்தி என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார். 
 
அதில், கடந்த மாதம் 2ம் தேதி, பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும்,  ஆனால், தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி, தனது சாதியை தவறாக பேசி, தன்னை இழிவுபடுத்தியதாக கூறி உள்ளார். 
 
விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது, விஜய் சேதுபதி தனது மேலாளர் ஜான்சன் மூலம் தாக்கியதாகவும்,... உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி, அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த மனு, சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்