ஜெயில் திரைப்படத்தின் ஒடிடி உரிமை: எந்த முடிவும் எடுக்கக்கூடாது-நீதிமன்றம்

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் தயாரித்துள்ளது.
x
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் தயாரித்துள்ளது. இந்த நிலையில், இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் படத்தின் விநியோக உரிமையை தங்கள் நிறுவனம்  பெற்றிருக்கும் நிலையில், அது வேறு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சாட்டிலைட் மற்றும் ஒடிடி உரிமையையும் விற்க முயற்சி மேற்கொண்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி, ஜெயில் திரைப்படத்தின் ஒடிடி உரிமை குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாதென கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸுக்கு  உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்