நடிகை ஆயிஷா சுல்தானா பிறந்தநாள் - புதிய திரைப்படம் அறிவிப்பு

ஆயிஷா சுல்தானா தனது பிறந்தநாளில் புதிய படத்தை அறிவித்துள்ளார். 124 (A) என்ற படத்தின் பெயரில், போஸ்டர் வெளியாகி உள்ளது.
x
ஆயிஷா சுல்தானா தனது பிறந்தநாளில் புதிய படத்தை அறிவித்துள்ளார். 124 (A) என்ற படத்தின் பெயரில், போஸ்டர் வெளியாகி உள்ளது. 124 என்பது தேசத் துரோகத்திற்கான இந்திய தண்டனைச் சட்டம் ஆகும். இந்த படத்தை ஆயிஷா சுல்தானா பிலிம்ஸ்' என்ற பேனரில் ஆயிஷாவே தயாரிக்கிறார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார், வில்லியம் பிரான்சிஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டரை லால் ஜோஸ் வெளியிட்டுள்ளார்.  டைட்டில் போஸ்டர் ஒரு செய்தித்தாளின் மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு நிர்வாகிக்கு  எதிரான இரண்டு செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளது; தேசத்துரோக குற்றச்சாட்டுகள் மற்றும் லட்சத்தீவை காப்பாற்றுங்கள் என உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்