இனி "தல"ன்னு கூப்பிடாதீங்க.. - நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்

'தல' என்று தன்னை அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
இனி "தல"ன்னு கூப்பிடாதீங்க.. - நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் 
 
'தல' என்று தன்னை அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை பற்றி எழுதும் போதோ, பேசும் போதோ தனது இயற்பெயரான அஜித் குமார் என்று குறிப்பிட்டால் போதும் என்று தெரிவித்துள்ளார்.அஜித் என்றோ அல்லது ஏகே என்று கூட குறிப்பிட்டால் போதுமானது என கூறியுள்ள நடிகர் அஜித்,தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ வைத்து அழைக்க வேண்டாம் என,ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி, மன அமைதி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வாழ்த்துவதாகவும் நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்