இந்தியில் வெளியான 'சர்தார் உத்தம்' திரைப்படம் - ஆஸ்காருக்கு பரிந்துரைக்க தேர்வுக்குழு மறுப்பு
சர்தார் உத்தம் திரைப்படம் பிரிட்டிஷார் மீது வெறுப்பை பரப்பும் விதமாக இருந்ததால் அந்த திரைப்படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கவில்லை என தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
சர்தார் உத்தம் திரைப்படம் பிரிட்டிஷார் மீது வெறுப்பை பரப்பும் விதமாக இருந்ததால் அந்த திரைப்படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கவில்லை என தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இந்தியில் அண்மையில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சர்தார் உத்தம். பகத் சிங் உடன் சுதந்திர போராட்டத்தில் இணைந்து ஈடுபட்ட உத்தம் சிங் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விக்கி கவுசால் நடித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற ஜாலியான் வாலாபாக் படுகொலைக்கு காரணமாக இருந்த பிரிட்டிஷ் கவர்னரை பழிவாங்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பிரிட்டிஷார் மீது வெறுப்பை பரப்பும் விதமாக இருந்ததால் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கவில்லை என தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Next Story