டாடி கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அதிக படங்களில் ஒப்பந்தம் - நடிகர் ஜான் விஜய் நெகிழ்ச்சி
சார்பாட்டா திரைப்படத்தில் டாடி கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தான் அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக நடிகர் ஜான் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அகடு திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார். அப்போது,
தான் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், அகடு திரைப்படம் வித்தியசமான திரைப்படமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story

