பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா - சிறந்த இந்திய திரைப்படமாக 'கர்ணன்' தேர்வு

பெங்களூரு இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டன.
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா - சிறந்த இந்திய திரைப்படமாக கர்ணன் தேர்வு
x
பெங்களூரு இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டன. இந்த திரைப்பட விழாவின் நிறைவு நாளில் சிறந்த இந்திய திரைப்படமாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற கர்ணன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதே போல்  சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு இயக்கிய கட்டில் திரைப்படம் வென்றுள்ளது.  சிருஷ்டி டாங்கே நடித்துள்ள கட்டில் திரைப்படம் சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை வென்ற நிலையில் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்