'96' திரைப்படம் வெளியாகி 3 ஆண்டு நிறைவு - சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ட்ரெண்டிங்
"96" திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பலரின் பள்ளிப்பருவத்தை நினைவூட்டியது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த படம் வெளியாகி 3 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, "3 years of 96" என்ற ஹேஸ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதியும் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார்.
Next Story

