இன்று 42வது பிறந்தநாளை கொண்டாடும் யுவனுக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து

இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா...
இன்று 42வது பிறந்தநாளை கொண்டாடும் யுவனுக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து
x
தனது 16 வயதில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா... 

சூர்யா- ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் கேட்டுபார் படத்தின் மூலம், ரசிகர்களின் கவனம் யுவன் பக்கம் திரும்பியது.

தந்தை இசைஞானி இளையராஜாவின் சாயல் கொஞ்சம் கூட தெரியாத அளவிற்கு பின்னணி இசையிலும் சரி, பாடலிலும் சரி... தனித்து இருக்கும் இவர் இசையமைத்த பாடல்களுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்... 

குடும்ப உறவுகளுக்கு மட்டுமின்றி.... காதல் இசையிலும் அசத்தியிருப்பார் யுவன்... காதல் பிரிவு, துரோகத்தில் இருந்து மீளவும் உதவுவது யுவன் பாடல்கள் தான்... 


குறிப்பாக அஜித் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பையெல்லாம் தனது தீம் மியூசிக்கில் நிறைவேற்றி வைத்து விடுவார், யுவன்... தீனா தொடங்கி பில்லா, மங்காத்தா, ஆரம்பம் என இந்த பட்டியல் நீளுகிறது.. தற்போது வலிமை படத்தை கொண்டாடி வருகின்றனர்,  அஜித் ரசிகர்கள்...

செல்வராகவன் - யுவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, கடைசியாக வந்த என்.ஜி.கே... வரை ஒவ்வொன்றும் தனி ரகம்...  7 ஜி ரெயின்போ காலனிக்காக பிலிம்பேர் விருது பெற்றார், யுவன்...

தனது துள்ளல் இசையால் மட்டுமின்றி பருத்தி வீரன் போன்ற கிராமத்து பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார், யுவன்....

தந்தை இளையராஜா, ஏ.ஆர் ரகுமான், ஜி.வி.பிரகாஷ், அனிருத் போன்ற பிற இசையமைப்பாளர்களின் படங்களில் பாடல்கள் பாடியது 
மட்டுமின்றி, தனது 100வது படமாக வெளிவந்த பிரியாணி படத்தில் இடம்பெற்ற "எதிர்த்து நில்" பாடலில் நான்கு இசையமைப்பாளர்களை பாடவைத்து ஆச்சரியப்படுத்தியிருந்தார்

பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் திரையுலகில் தனது தனி முத்திரையை தொடர்ந்து பதித்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா... 

இசையால் தங்களை கட்டிப்போட்டு வைத்துள்ள யுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, கொண்டாடி வருகின்றனர், அவரது ரசிகர்கள்... 


Next Story

மேலும் செய்திகள்