முடிவுக்கு வந்த ஷங்கர் - வடிவேலு பிரச்னை; இம்சை அரசன் படப்பிரச்னைக்கு சுமூக தீர்வு

இயக்குனர் ஷங்கர் - நடிகர் வடிவேலு இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
முடிவுக்கு வந்த ஷங்கர் - வடிவேலு பிரச்னை; இம்சை அரசன் படப்பிரச்னைக்கு சுமூக தீர்வு
x
இயக்குனர் ஷங்கர் - நடிகர் வடிவேலு இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு நடித்திருந்த திரைப்படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி.காட்சிக்கு காட்சி நகைச்சுவை, மறக்க முடியாத பாத்திரம் இம்சை அரசன் என வடிவேலுவை கொண்டாடினர் ரசிகர்கள்.இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற, அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு படத்தின் அடுத்த பாகமாக இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் லைகா நிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரித்தார் ஷங்கர். ஆனால் சில நாட்களிலேயே பல்வேறு காரணங்களால் படத்தில் இருந்து விலகினார் வடிவேலு.. படம் கைவிடப்பட்டது.படத்திற்காக செட் அமைத்த நிலையில், வடிவேலுவின் இந்த முடிவு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு முறையிட, வடிவேலுவிற்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது.. 
இதனால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போயின. கத்திச்சண்ட, மெர்சல் படங்களில் நடித்தாலும், வடிவேலுவால் தொடர்ந்து படங்களை கொடுக்க முடியவில்லை.இந்த பிரச்னையை முடிக்க, ஷங்கர் - வடிவேலு தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு எட்டப்படாமல் இருந்து வந்த சூழலில், வெள்ளிக்கிழமை அன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் சங்கர் அளித்த புகார் தொடர்பாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. லைகா நிறுவன தயாரிப்பில் ஒரு படத்தை நடித்து கொடுக்க வடிவேலு ஒப்புக்கொண்டதை அடுத்து தீர்வு எட்டப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 




Next Story

மேலும் செய்திகள்