70களின் அரசியலை பேசும் சார்பட்டா பரம்பரை - உதயநிதி ஸ்டாலின் பாராட்டி ட்வீட்
சமீபத்தில் வெளியாகி இருக்கும் சார்பட்டா பரம்பரை திரைப்படம், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
சமீபத்தில் வெளியாகி இருக்கும் சார்பட்டா பரம்பரை திரைப்படம், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்து வெளியாகி இருக்கிறது, சார்பட்டா பரம்பரை திரைப்படம். குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், எமர்ஜென்சி, மிசா என 70களின் அரசியல் சூழலையும், இயக்குனர் பா.ரஞ்சித் காட்சிப்படுத்தி உள்ளார். இதில், திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலத்தை குறிப்பிட்டு வரும் காட்சிகள், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. முன்னதாக, 70களில் இருந்த நெருக்கடி நிலையை, திமுக மற்றும் அப்போதைய முதல்வர் கருணாநிதி எதிர்கொண்ட விதத்தை கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார்.அதேசமயம், சார்பட்டா பரம்பரை திரைப்படம், முழுக்க முழுக்க திமுக பிரசார படமாக இருப்பதாக குற்றம்சாட்டிய அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்து இருப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
Next Story