கார் விபத்தில் தோழியை பறிகொடுத்த யாஷிகா - அதிவேகம், அஜாக்கிரதையால் விபத்து

மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நடிகை யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விபத்து முதல் போலீசார் நடவடிக்கை வரை நடந்தது என்ன விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
கார் விபத்தில் தோழியை பறிகொடுத்த யாஷிகா - அதிவேகம், அஜாக்கிரதையால் விபத்து
x
மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நடிகை யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விபத்து முதல் போலீசார் நடவடிக்கை வரை நடந்தது என்ன விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம், தனியார் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா. இவர் கடந்த சனிக்கிழமை தனது தோழி வள்ளி செட்டி பவானி மற்றும் நண்பர்கள் சையத், அமீருடன் மாமல்லபுரத்திற்கு சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு நள்ளிரவில் சென்னை திரும்பிய போது சூளேரிக்காடு பகுதியில் இவர்கள் வந்த கார் விபத்துக்குள்ளானது.இதில் பவானி நிகழ்விடத்திலேயே உயிரிழக்க, கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிந்து அப்போலோ மருத்துவமனையில் யாஷிகா அனுமதிக்கப்பட்டார். மற்ற இரு நண்பர்களும் சிறு காயங்களுடன் அடையாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்விபத்து குறித்து விசாரணை நடத்தியதில், 129 கிலோ மீட்டர் வேகத்தில் யாஷிகா ஆனந்த் காரை ஓட்டி வந்தது, சாலை நடுவே வைக்கப்பட்டுள்ள சிசிடிவியிலும், வாகன வேகக் கண்காணிப்பு கருவிகளில் தெரியவந்துள்ளது. Next Story

மேலும் செய்திகள்