விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுமா? - ஓடிடியால் திரையரங்குகள் அழியாது என உறுதி

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் நேரில் சந்தித்து மனு அளித்துள்ள நிலையில், விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுமா? - ஓடிடியால் திரையரங்குகள் அழியாது என உறுதி
x
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் நேரில் சந்தித்து மனு அளித்துள்ள நிலையில், விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வந்துள்ள நிலையில், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.ஊரடங்கு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், திரை கலைஞர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் இதில் விதிவிலக்கல்ல..தங்கள் விருப்பமான நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோவில் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்கள் கூட்டம் ஒருபுறமிருக்க... கட் அவுட், பாலாபிஷேகம், மேள தாளம் என திருவிழா போல் ஒவ்வொரு படமும் வெளியாகும் போது ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது..இப்படி இருக்கையில், ஊரடங்கால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், பெரிய நடிகர்களான சூர்யாவின் 'சூரரை போற்று', தனுஷின் 'ஜகமே தந்திரம்' மற்றும் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' உள்ளிட்ட படங்கள் அனைத்தும் திரையரங்க கொண்டாட்டங்கள்  இன்றி ஓடிடியிலேயே வெளியாகின.தற்போது மீண்டும் வெளியில் சுதந்திர பறவைகளாக மக்கள் நடமாட தொடங்கி உள்ள நிலையில்,  சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த திரையரங்க உரிமையாளர்கள், தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்