லைகா ​நிறுவனம், இயக்குநர் ஷங்கர் வழக்கு -மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
லைகா ​நிறுவனம், இயக்குநர் ஷங்கர் வழக்கு -மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் கமல் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை  லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில், லைகா தரப்பும், இயக்குனர் சங்கர் தரப்பும்,  தாங்களே சமரசம் செய்து கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், அந்த முயற்சி தோல்வி அடைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில்,  இடைக்கால நிவாரணம் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை  தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். அதே சமயம், இப்பிரச்சினையில் தீர்வுகாணும் மத்தியஸ்தராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமனம் செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்