நகைச்சுவை நடிகர் பாண்டு உயிரிழந்தார்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்
x
நகைச்சுவை நடிகர் பாண்டு உயிரிழந்தார்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு  கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். நடிகர் பாண்டு, சின்னத் தம்பி, திருமதி பழனிசாமி, உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.  'கரையெல்லாம் செண்பகப் பூ' படத்தின் மூலம திரையுலகில் அறிமுகமான இவர், நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்,. அதிமுக கட்சி கொடியை வடிவமைத்ததும் பாண்டு என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டுவின் மறைவிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரவித்து வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்