மீண்டும் இணையும் 'கர்ணன்' கூட்டணி...டுவிட்டரில் நடிகர் தனுஷ் தகவல்

மீண்டும் இணையும் 'கர்ணன்' கூட்டணி...டுவிட்டரில் நடிகர் தனுஷ் தகவல்
மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி...டுவிட்டரில் நடிகர் தனுஷ் தகவல்
x
மீண்டும் இணையும் 'கர்ணன்' கூட்டணி...டுவிட்டரில் நடிகர் தனுஷ் தகவல்

கர்ணன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷ், லால், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெளியான கர்ணன் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக தனுஷ் கூறியுள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில் படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், அடுத்தாண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனுஷின் டுவிட்டை ரீடுவிட் செய்துள்ள கர்ணன் பட தயாரிப்பாளர் தாணு அளவில்லா ஆனந்தம் என்று பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்