நவ. 4-ம் தேதி அண்ணாத்த வெளியீடு - விஜய்யின் தளபதி 65 வெளியாகுமா..?
பதிவு : ஜனவரி 26, 2021, 06:44 PM
ரஜினியின் அண்ணாத்த படம், தீபாவளிக்கு ரிலீசாகும் என்று, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ரஜினியின் 168 வது திரைப்படம்"அண்ணாத்த"கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர். படத்தின்  முதல் கட்ட படப்பிடிப்பு, 2019 ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி, 2020 பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிடலாம் என முதலில், படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.கொரோனா ஊரடங்கால் மார்ச் மாதத்தில் தொடங்க இருந்த 2-ம் கட்ட படப்பிடிப்பு நின்று போனது.அதன் பிறகு அக்டோபர் மாதம் தொடங்கி படத்தை 2021 ஆண்டு பொங்கலுக்கு வெளியிடலாம் என முடிவு செய்தார்கள்.இறுதியாக 40% படப்பிடிப்பை முடிக்க கடந்த டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றிருந்தார். அப்போது படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.. இதனையடுத்து ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அண்ணாத்த படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன்  ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 30 சதவீதம் காட்சிகள் படமாக்க வேண்டியுள்ளதால், அந்த பணிகள் முடிந்து, "அண்ணாத்த"வரும் நவம்பர் 4 ஆம் தேதி ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் தளபதி 65 வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ரஜினிகாந்தின் படம் அறிவிப்பு மூலம் விஜய் படம் தீபாவளிக்கு வராது என உறுதியாகி உள்ளது. இந்த வருட தீபாவளி ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

400 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

216 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

56 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

47 views

பிற செய்திகள்

பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் "கண்டா வர சொல்லுங்க" - யார் இந்த "தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்"

கிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன்.

534 views

"தலைவி" திரைப்படம் ஏப்ரல் 23இல் வெளியீடு

கங்கான ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக, படக்குழு அறிவித்துள்ளது

23 views

திரைக்கு வரும் டாம் அண்ட் ஜெர்ரி - கலக்க காத்திருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரம்

கார்ட்டூன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள கதாபாத்திரங்கள் டாம் அண்ட் ஜெர்ரி. எலி, பூனை கதாபாத்திரங்கள் சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு இன்றளவும் ரசிகர்கள் ஏராளம்

73 views

திரையில் ஜெ... திக் விஜயம்... ஜெயலலிதாவின் வெற்றிப் பயணம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் திரையுலகில் அவரது வெற்றிப் பயணத்தை திரும்பிப் பார்ப்போம்....

123 views

60 லட்சம் பார்வைகளை கடந்த "கர்ணன்" பாடல்

"கர்ணன்" படத்தின் "கண்டா வரச்சொல்லுங்க" என்ற பாடல், யூ டியூப்பில் 60 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

2429 views

சாதாரண தோற்றத்தில் வருகை தந்த அஜித்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சாதாரண தோற்றத்தில் வருகை தந்த அஜித்தால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித்தின் திடீர் வருகைக்கான காரணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

641 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.